ஆயிரக்கணக்கான மொழிகள், கோத்திரங்கள், வாழ்க்கை நெறிகள், கலாசாரங்கள், கடவுள்கள், உணவுகள், உடைகள் கொண்ட பாரதத்தில் அனைவரும் ஒன்றாக, ஒற்றுமையாக வாழுகின்றோம். அனைத்து மாநிலங்களும் வெவ்வேறு கோட்பாடுகள் கொண்டவையாக இருந்தாலும் பாரதம் என்ற குடையின் கீழ் நாம் அனைவரும் சகோதரர்களாக வாழுகின்றோம். தமிழகத்தில் பிறந்த நாம் அனைவரும் தமிழர்கள் என்றாலும் ஏறத்தாழ பாதிக்கும் மேற்ப்பட்டவர்கள் அவர்களது வீட்டிலும், சொந்தங்களிடமும் வேற்று மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம், உறுது, இந்தி, மராட்டியம் என பல மொழிகள் பேச்சு மொழியாக கொண்டுள்ளனர்.
தமிழ் பேசுபவர்கள் கூட ஒவ்வொரு மாவட்டத்திலும் பேசும் தொனியிலும் வார்த்தைகளிலும் வேறுபாடு இருக்கிறது. கன்னியாகுமாரி மாவட்டத்தை சேற்ந்த நான் சென்னையிலோ, கோவையிலோ, திருச்சியிலோ போய் தமிழ் பேச முடியாமல் திணறுவதுண்டு. கன்னியாகுமாரி மாவட்டத்திலும் இத்தகைய வேறுபாடுகள் உண்டு. இங்குள்ள தமிழ் பேச்சு மொழியும் இலங்கை தமிழ் பேச்சு மொழிக்கும் ஏராளமான சமன்பாடுகள் உள்ளதை உணர முடிகிறது. அத்தகைய வேறுபாடுகளை மற்றவர்களுக்கும் எடுத்து சொல்வதே இந்த கதையின் நோக்கம். பெருமளவில் இயற்கை வளங்களும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் வயல்களும் எட்டு அணைக்கட்டுகளும் கன்னியாகுமாரி, சுசீநதிரம், நாகர்கோவில், வட்டக்கோட்டை, குளச்சல், பத்மநாபபுரம் அரண்மனை, திருவட்டார், திற்பரப்பு, மாத்தூர் தொட்டிப்பாலம் போன்ற சுற்றுலா தலங்களும் மேற்க்கு தொடற்ச்சி மலைகளும் கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தை 1956 நவம்பர் ஒன்றாம் தேதி கேரளாவிடம் வாங்கி தமிழகத்தில் சேர்த்த நாள் முதல் அனைத்து மத, மொழி, சாதியினரும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகின்றனர். மலையாள மொழி பேசுபவர்கள் ஏறத்தாழ 40% பேர்களும் தமிழ் பேசுபவர்கள் 60% ஆட்களும் உண்டு. இருப்பினும் இம்மாவட்டத்திலுள்ளவர்கள் திருநெல்வேலிக்கும் அப்புறம் சென்றால் மலையாளத்தான் என்றும் களியக்காவிளை தாண்டினால் அண்ணாச்சி என்றும் செல்லமாக அழைப்பார்கள். அதாவது இங்குள்ளவர்களை தமிழனாகவோ மலையாளியாகவோ யாரும் ஏற்றுக்கொண்டதில்லை. அதன்வாயிலாக ஏற்ப்படும் கசப்பான விளைவுகளும் ஏற்ப்படுவதுண்டு.
Reviews
There are no reviews yet.