மாற்றம் என்பது இயற்கை நியதி. இரவு பகலாவதும், பகல் இரவாவதும், காலங்கள் மாறுவதும், நிமிடத்திற்கு நிமிடம் மனிதன் மாற்றமடைவதும், எண்ணங்கள் மாறுவதும், வாழும் முறைகள் மாறுவதும் குறிப்பாக காலத்திற்கேற்ப மருத்துவமும் மாற்றத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் இன்று மாற்றுமுறை மருத்துவ விஞ்ஞானம் மிகவும் வளர்ச்சியடைந்து வருகிறது.
அந்த அடிப்படையில் மாற்றுமுறை மருத்துவத்திற்கென்று எனது பங்களிப்பாக இதுவரை எண்பத்து நான்கு ஆங்கில நூல்களையும் பத்துக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களையும் எழுதியுள்ளேன். இருந்த போதும் தமிழ் மொழியில் மருத்துவ நூல்களின் தேவையை எண்ணி “இயற்கை மருத்துவக் கையேடு” என்ற நூலை தமிழில் எழுதியுள்ளேன். அந்நூல் ஒரு நீரிழிவு நோயைப் பற்றி அந்நோயாளிகள் எளிதில் புரிந்து கொள்ளும்படி விரிவாக எழுதப்பட்ட நூல் .
Reviews
There are no reviews yet.